சுங்கக் கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்? - டிடிவி தினகரன் கேள்வி

சுங்கக் கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம் என்று மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-03-31 07:23 GMT
சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

உரிமம் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்திருப்பது மோசமான நடவடிக்கையாகும். பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?

மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி சுங்கக் கட்டண உயர்வை கைவிடுவதுடன், காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்