பெண்ணின் தலையில் பேன் பார்த்த குட்டி குரங்கு

பெண்ணின் தலையில் பேன் பார்த்த குட்டி குரங்கு சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்.

Update: 2022-03-30 19:50 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராமப் பகுதிக்குள் குரங்குகள் கூட்டம் புகுந்தன. இந்த கூட்டத்திலிருந்த குட்டிக் குரங்கு ஒன்று பிரிந்து கடந்த சில நாட்களாக அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்து உள்ளது. இந்த குட்டி குரங்குக்கு அப்பகுதி மக்கள் தேவையான பழம் உள்பட உணவுகள் வழங்கி உள்ளார்கள்.

இந்தநிலையில் அந்த குரங்கு அதேப்பகுதியை சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற பெண்ணுடன் பழகி உள்ளது. இதில் குரங்கு அந்தப் பெண்ணின் தோளில் ஏறி அமர்ந்து தலையில் பேன் பார்க்கத்தொடங்கியது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி இளைஞர்கள் இந்த காட்சியைத் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்