மீனவருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை என புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழுங்கியது.

Update: 2022-03-25 16:38 GMT
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 48). மீனவரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி செல்வநாதன்  குற்றவாளியான சத்தியமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்