ஈரோடு: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்...!
ஈரோடு அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
வானிசாகர்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே புங்கார் காலனி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் முறையாக வருவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் காலி குடங்களுடன் பவானிசாகர்-பண்ணாரி சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மைதிலி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.