44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு : மு.க ஸ்டாலின் பெருமிதம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-03-15 18:29 GMT

44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி  சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த  செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்க  உள்ளனர்.

இது குறித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : 

செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி செஸ் ஒலிம்பியாட்  போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது .இந்த போட்டியில் பங்கேற்க்க வரும் வீர ,வீராங்கனைகளை தமிழ்நாடு வரவேற்கிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்