உக்ரைனில் மீட்பு பணியில் பாகுபாடு: தமிழக மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பதா? சீமான் கண்டனம்
உக்ரைனில் மீட்பு பணியில் பாகுபாடு: தமிழக மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பதா? சீமான் கண்டனம்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்டை நாடுகள் மூலமாக மீட்கப்படும்வேளையில், தமிழகம் உள்ளிட்ட தென்னகப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
போலந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாடு போன்ற தென்னாட்டுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
ஆகவே, இவ்விவகாரத்தில் சீரிய கவனமெடுத்து, தமிழக மாணவர்கள் மீது பாரபட்சமான போக்கைக் காட்டும் இந்திய தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மாணவர்களை மீட்டுக் கொண்டுவர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.