கடலூர் திமுக எம்.எல்.ஏ.,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-03-06 06:58 GMT
கோப்புப்படம்
கடலூர்,

கடலூர் திமுக எம்.எல்.ஏ., கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் கடலூர் மாநகராட்சியின் பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றி, மேயர் பதவியையும் கைப்பற்றியது. இந்த நிலையில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக திமுக வில்  மாற்று வேட்பாளரை கோ.அய்யப்பன் நிறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பனை கட்சியில் இருந்து நீக்குமாறு கடலூர் திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்