மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகளை மேலும் ஒரு வாரம் பார்வையிட அனுமதி முதல்-அமைச்சர் நடவடிக்கை
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகளை மேலும் ஒரு வாரம் பார்வையிட அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், விடுதலை போரில் தமிழகத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 3 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. பின்னர் இந்த அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு, ஆங்காங்கே மக்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டன.
இந்தநிலையில் பயண திட்டம் நிறைவடைந்து, இந்த ஊர்திகள் சென்னை கொண்டு வரப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 20-ந்தேதி இந்த ஊர்திகள் நிறுத்தப்பட்டன. 23-ந்தேதி வரை (நேற்று) பொதுமக்கள் இந்த ஊர்திகளை பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்படடு இருந்தது. இந்தநிலையில் இந்த ஊர்திகளை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும்...
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் கடந்த மாதம் 26-ந்தேதி நடந்த நடந்த குடியரசு நாள் விழாவில் செய்தித்துறை சார்பில் விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டு களிக்கிற வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த 3 ஊர்திகளை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் ஒரு வாரத்துக்கு...
தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் மெரினா கடற்கரை இணைப்பு சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு கடந்த 20-ந்தேதி முதல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பெரும் திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந்தேதியன்று இந்த ஊர்திகளை பார்வையிட்டு அங்கு கூடியிருந்த மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். சமூகவலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்துக்கு அந்த இடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.