சீர்காழி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
சீர்காழி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 11 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று சீர்காழி நகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், தே.மு.தி.க.1 வார்டிலும், ம.தி.மு.க. 1 வார்டிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளன.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க. ) -161
டேவிட் (தி.மு.க.) -149
ரமேஷ் (சுயே) -123
பாண்டியன் (தே.மு.தி.க.)-79
2-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
ரஹ்மத் நிஷா ( சுயே) - 508.
சிராஜுன்னிஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 267
ஜரினா பேகம் (அ.தி.மு.க.) 28
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கஸ்தூரிபாய் ( தி.மு.க.) - 383
காயத்ரி (அ.தி.மு.க.) - 284
சுகந்தி (சுயே) - 80
4-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
ரமாமணி (அ.தி.மு.க.) - 288
விஜயரெங்கன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)- 214
கண்ணையன்( சுயே) -170
முருக பாரதி (சுயே) -160
5-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
கலைச்செல்வி (சுயே) -347
குணவதி (தி.மு.க.) -289
அஞ்சலிதேவி (அ.தி.மு.க.) - 254
பூங்குழலி (சுயே) -103
6-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
பாலமுருகன் (சுயே) - 423.
லட்சுமி (அ.தி.மு.க. ) - 310
தங்கதுரை (தி.மு.க.) -103
செல்வம் ( சுயே) 97
7-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
நித்தியா தேவி (சுயே) - 599
மஞ்சுளா (காங்.) - 329
தவமணி (அ.தி.மு.க.) - 83
பிரியா ( பா.ம.க.) -82
8-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
நாகரத்தினம் (அ.தி.மு.க. ) -232
தனவள்ளி (தி.மு.க.) 193
துர்க்காதேவி (சுயே) 187
9-வது வார்டு ( தி.மு.க. வெற்றி)
தேவதாஸ் ( தி.மு.க.) - 443
நடராஜன் (சுயே ) - 150
பிரகாஷ் (அ.தி.மு.க.) -129
10-வது வார்டு (பா.ம.க. வெற்றி)
சூரிய பிரபா (பா.ம.க.) - 470
உமாவதி ( தி.மு.க.) - 378
ஹேமலதா (அ.தி.மு.க.) - 241
11-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
ராஜேஷ் (சுயே) - 240.
கோபி (தி.மு.க.) -192
நாகராஜ் (சுயே) -128
முரளிராஜ் (சுயே) - 87
பாஸ்கர் (அ.தி.மு.க.) - 61
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ராமு (தி.மு.க.) - 239
பாலகுமாரன் (சுயே) 183
சுரேஷ் (அ.தி.மு.க.) -156
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
முபாரக் அலி (தி.மு.க.) 276
காவேரி (சுயே) -156
கமலகிருஷ்ணன் (சுயே) -134
துரைராஜ் (அ.தி.மு.க.) -76
14-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
ஜெயந்தி ( சுயே) - 250
சிவப்பிரியா( தி.மு.க.) - 249
அருணா (அ.தி.மு.க.) -191
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சாமிநாதன் (தி.மு.க.) - 254
நடராஜன் (சுயே) -130
கார்த்திகேயன் (அ.தி.மு.க.) - 114.
16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
வள்ளி ( தி.மு.க.) - 461
ஜெயந்தி (அ.தி.மு.க.) -345
அபிராமி (பா.ம.க. ) - 92
அம்பிகா (சுயே) - 92
17-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ரம்யா (தி.மு.க.) - 640
பூங்குழலி (அ.தி.மு.க.) - 322
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சுப்பராயன் (தி.மு.க.) - 443
நவநீதன் (பா.ம.க. ) -173
மேக்சிம் ராமமூர்த்தி ( அ.தி.மு.க.) -131
19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஏ.பி.எஸ். பாஸ்கரன் ( தி.மு.க.) - 406
வினோத் (அ.தி.மு.க.) 314
சரவணன்( பா.ம.க. ) - 58
உமாமகேஸ்வரி (பா.ஜ.க. ) - 25
முருகேசன் (நாம் தமிழர் கட்சி) - 4
20-வது வார்டு (தே.மு.தி.க. வெற்றி)
ராஜசேகரன் (தே.மு.தி.க.) - 466
மணிவண்ணன் (அ.தி.மு.க.) 195
இளங்கோவன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) -151
அருண் பாலாஜி (அ.ம.மு.க.) -129
மொரார்ஜி (காங்.) -75
21-வது வார்டு (ம.தி.மு.க. வெற்றி)
முழுமதி (ம.தி.மு.க. ) - 402
அஸ்மா நாச்சியா நாசர் (சுயே) -175
புஷ்பா (அ.தி.மு.க.) -11
விஜயகுமாரி( பா.ம.க. ) -10
22-வது வார்டு (பா.ம.க.)
வேல்முருகன் ( பா.ம.க.) - 525
குகன் (தி.மு.க.) -296
23-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ரேணுகா தேவி (தி.மு.க.) - 434
நீலா (அ.தி.மு.க.) -194
சுபா (பா.ம.க. ) 169
24-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
துர்கா பரமேஸ்வரி ( தி.மு.க.) - 183
திரிபுரசுந்தரி (அ.தி.மு.க.) -154
சுமதி (சுயே) -71
சாந்தி (பா.ஜ.க.) - 58.
உமா (பா.ம.க. ) - 8
முன்னதாக வெற்றி பெற்ற 24 பேர்களுக்கும் உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராஹிம் சான்றிதழ் வழங்கினார். அப்போது மேலாளர் காதர்கான், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் செல்லத்துரை, சார்லஸ், பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர். பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.