உள்ளாட்சித்தேர்தலில் திமுக செயற்கையான வெற்றியை பெற்றிருக்கிறது: ஓ. பன்னீர்செல்வம்

நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-22 11:58 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக-வின் வெற்றி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில்,

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக செயற்கையான வெற்றியை பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால், அதிமுக வெற்றிபெற்றிருக்கும். நடந்துமுடிந்த தேர்தலானது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல. 

அதிமுக தொண்டர்கள் எந்தவித தொய்வின்றி கட்சி பணியை தொடர வேண்டும். மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியிலான வாய்ப்பு அதிமுக-விற்கு விரைவில் அமையும். மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றிபெறும். இது நிச்சயம் நடக்கும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்