நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர்களின் மகன்கள் வெற்றி..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், ஆவடி மாநகராட்சியின் 4வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் நாசரின் மகன் ஆசீம் ராஜா வெற்று பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.