தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்..!

தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார், கடத்த முயன்ற 8 பேரை கைது செய்தனர்.

Update: 2022-02-21 05:52 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு படகில் இருந்தவர்களை சோதனை செய்தனர். 

அதில் கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் (43),  கிங் பேன் (25), சிலுவை (44),  அஸ்வின் (27), வினிஸ்டன் (24), சுபாஷ் (26), கபிலன் (21), சைமோன் (எ) சுக்கு (30) ஆகிய 8 பேரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 30 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல் கும்பல் தலைவன் இருதயவாஸ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 7 நபர்களையும் கைது செய்து தூத்துக்குடி க்யூ பிரிவு அலுவலகம் கொண்டு வந்துள்ளனர். இருதயவாஸ் இலங்கையில் உள்ள முக்கிய புள்ளியுடன் தொடர்பில் இருந்து பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்