மாநில தேர்தல் ஆணையம் ரோபோ போல செயல்படுகிறது - ஜெயக்குமார் விமர்சனம்

மாநில தேர்தல் ஆணையம் ரோபோ போல செயல்படுகிறது அதன் ரிமோட் மு.க. ஸ்டாலினிடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-02-17 13:55 GMT
சென்னை,

அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்  சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீஸ் கமிஷனரை சந்தித்து இரண்டு முக்கியமான கோரிக்கைகளை தெரிவித்துள்ளேன்.

சென்னையில் ரவுடிகளை ஏவி விட்டு,கலவரத்தை உண்டாக்கி,வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது,பூத் ஏஜெண்டுகளை மிரட்டுவது உள்ளிட்ட அராஜகங்களில் ஈடுபட ஆளுங்கட்சியான தி.மு.க.திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்றும்,எனவே பதற்றமான,மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் ப £துகாப்பு போடவேண்டும்,என்று கமிஷனரிடம் கேட்டுள்ளோம்.

தமிழகம் முழுவதும் ஆள்கடத்தல்,வேட்பாளர்களை மிரட்டுதல்,வாக்க £ளர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்தல் போன்ற அராஜக செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் பல முறை புக £ர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக எவ்வித நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை.

மாநில தேர்தல் ஆணையம் ரோபோ போல செயல்படுகிறது.அதன் ரிமோட் முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உள்ளது.அவர் சொல்வது போல்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை தேடி தருவார்கள்.மாநிலம் முழுவதும் இரட்டை இலை அலை வீசுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்