10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு; வினாத்தாள்கள் கசிந்ததால் அதிர்ச்சி

நாளை நடைபெறும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வினாத்தாள்கள் கசிந்துள்ளன

Update: 2022-02-13 15:43 GMT
திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதியிலிருந்து இந்த  திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு கணித திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாளை நடைபெறும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வினாத்தாள்கள் கசிந்துள்ளன. வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்