“தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

Update: 2022-02-12 12:23 GMT
சென்னை,

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் சுதந்திரமாக, ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஒட்டுமொத்தமாக தொகுத்து கவர்னரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்