பர்தா அணியும் விவகாரம் விசாரணை நடத்த அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
பர்தா அணியும் விவகார சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி
பர்தா அணியும் விவகார சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
பர்தா அணியும் விவகாரம்
அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்ததாகவும், அவ்வாறு பர்தா அணிந்து வரக்கூடாது என்று பள்ளி ஆசிரியை கூறியதாகவும் தெரிகிறது.
ஆசிரியரின் கருத்துக்கு சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் பாகுபாடு கூடாது என்ற அடிப்படையிலேயே பர்தா அணிந்து வருவதை தவிர்க்க கூறியதாகவும், அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் ஆசிரியை விளக்கமளித்தார்.
விசாரணை நடத்த உத்தரவு
அவரது விளக்கத்தில் திருப்தி அடையாத சமூக அமைப்பினர் இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்கள்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சீருடை கட்டுப்பாடு குறித்து கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
--------