உடுமலை தனியார் நூற்பாலையில் தீ விபத்து
உடுமலை அருகே தனியார் நூற்பாலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
திருப்பூர்
உடுமலை அருகே எலையமுத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் திடீர் என்று தீ பற்றியது. இது தொடர்பாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பஞ்சு மற்றும் நூற்பாலை எந்திரங்களின் பரவிய தீயை போராடி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.