சென்னையில் ரூ.4 கோடி செலவில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அனுமதி
சென்னையில் ரூ.4 கோடி செலவில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் உருமாற்றத்தை கண்டறிய, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் உள்ள ‘இன்ஸ்டெம்’, ஐதராபாத்தில் உள்ள சி.டி.ஐ.டி மற்றும் புனேவில் உள்ள என்.ஐ.வி ஆகிய மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தன.
இந்தநிலையில், முதல்-அமைச்சரால் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், இன்று (நேற்று) அதற்குரிய அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதன் அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தை பெருமளவு தடுத்திட முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.