மூதாட்டியின் கைரேகை மூலம் ரூ.26 ஆயிரம் மோசடி சேவை மைய உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

ஆவுடையார்கோவில் அருகே மூதாட்டியின் கைரேகை மூலம் ரூ.26 ஆயிரத்தை மோசடி செய்த சேவை மைய உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-12-25 18:45 GMT
ஆவுடையார்கோவில், 
ரூ.26 ஆயிரம் மோசடி
ஆவுடையார் கோவிலை அடுத்த சித்தக்கூர் அருகே உள்ள மெய்யனூரை சேர்ந்தவர் மலையாண்டி. இவருடைய மனைவி ராக்கம்மாள் (வயது 70). 
இவர் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஒக்கூரில் உள்ள ரேகா என்பவர் நடத்தி வரும் சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் வங்கியில் தனது கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிந்து கொள்வதற்காக தனது கைரேகையை வைத்துள்ளார். அப்போது சேவை மையத்தை சேர்ந்தவர்கள் ராக்கம்மாள் வங்கி கணக்கில் இருந்து ரூ.26 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர்.
கைது
இதனை அறியாத ராக்கம்மாள் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணி சேவை மைய உரிமையாளரான ரேகா, அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்