திருக்காஞ்சியில் பரபரப்பு கோவில் இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

திருக்காஞ்சி கோவிலுக்கு சொந்தமான இடத்ைத ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-24 16:29 GMT
வில்லியனூர்
திருக்காஞ்சி கோவிலுக்கு சொந்தமான இடத்ைத ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம், பூங்கா, தர்ப்பண மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்துக்கு செல்லும் வழியில் உள்ள  சாலையை ஆக்கிரமித்து 3 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனை அகற்றுமாறு வருவாய்த்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து வேறு இடத்தில் வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும்அவர்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.

3 வீடுகள் இடித்து அகற்றம்

இந்தநிலையில் வில்லியனூர் துணை கலெக்டர் ரிஷிதா குப்தா, தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன்    எந்திரத்தின் மூலம் 3 வீடுகளையும் இடித்து அகற்ற உத்தரவிட்டனர்.
அப்போது அங்கு வசித்து வந்தவர்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாக கூறி பொக்லைன் எந்திரம் மூலம் 3 வீடுகளையும் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க மங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்