அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி-இளநிலை வருவாய் ஆய்வாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி செய்ததாக இளநிலை வருவாய் ஆய்வாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-12-21 18:47 GMT
குளித்தலை, 
அரசு வேலை வாங்கித்தருவதாக...
புதுக்கோட்டை மாவட்டம் விளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 38). இவரிடம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் குளித்தலை சிறு பூங்கா தெருவை சேர்ந்த வேலுமணி (49) என்பவர் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.6½ லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால் வேலை வாங்கித்தராமல் அவர் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர், வேலுமணியின் வீட்டிற்கு சென்று ரூ.6½ லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டு உள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அவர் சந்திரசேகரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வேலுமணி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்