ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
அம்பத்தூர் அருகே சரக்கு ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
ஆவடி,
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த முக்குரும்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25). இவர், பாடி பகுதியில் தங்கி சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
அதேபோல் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் சரண்யாஸ்ரீ (20). டிப்ளமோ படித்துள்ள இவரும், பாடி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
ஜெயக்குமார், சரண்யாஸ்ரீ இருவரும் ஒரே பகுதியில் தங்கி இருந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்தநிலையில் காதலர்களான ஜெயக்குமார்-சரண்யாஸ்ரீ இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் அம்பத்தூர்-திருமுல்லைவாயல் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற சரக்கு ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் காலை சரண்யாஸ்ரீயின் பெற்றோர் அவரை பார்க்க வந்தனர். பாடியில் உள்ள அவரது அறையில் இல்லாததால், அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று பார்த்தனர். அங்கும் அவர் இல்லாததால் தங்கள் மகளை காணவில்லை என கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில்தான் காதல் ஜோடி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஆவடி ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.