எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முதற்கட்டமாக ரூ.352 கோடி ஒதுக்கீடு
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு முதற்கட்டமாக 352கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை
தமிழகத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள்.
2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், 2021-2022 நிதியாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை, அதாவது 352 கோடி ரூபாய் விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.