3 மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லை: சிறுமியை 4-வது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை 4-வது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டரையும், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 41). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு பெரியகருக்கை, பூதம்பூர், கானூர் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களுடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ராதாகிருஷ்ணனை பிரிந்து அவரது மனைவிகள் தனியாக வசித்து வருகின்றனர்.
மேலும் ராதாகிருஷ்ணனின் தம்பி, சொத்துக்களை பிரித்து தர கூறியதாகவும், தனது வாரிசுக்குத்தான் சொத்து தருவேன் என்று கூறி ராதாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியுடன் திருமணம்
இந்நிலையில் அவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பஸ்சில் வரும்போது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அந்த பெண், பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகளை தன்னுடன் அழைத்து வந்து ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணன் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவருக்கு, தனது மகளை திருமணம் செய்ய அந்த பெண் சம்மதித்துள்ளார். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதியன்று ஒரு கோவிலில் ராதாகிருஷ்ணனின் தாய் ருக்குமணி, சிறுமியின் தாய் சேர்ந்து சிறுமிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
போக்சோவில் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் ராதாகிருஷ்ணனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.