நீலகிரி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து:உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் 4 உடல்கள் மீட்பு; 3 பேர் காயம்

நீலகிரியில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்படுள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கபட்டுள்ளன.

Update: 2021-12-08 08:02 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்யதாக தகவல் கிடைத்துள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். 

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  4 பேர் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

பனிமூட்டத்தால் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்படரில் பயணம் செய்த ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்று தெரியவில்லை.  நீலகிரியில் விபத்துகுள்ளான ஹெலிகாப்டரில் மிக உயர் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,.

மேலும் செய்திகள்