புதுச்சேரியில் 28 பேருக்கு தொற்று உறுதி மூதாட்டி பலி

புதுச்சேரியில் புதிதாக 28 பேருக்கு தொற்று; உறுதிசெய்யப்பட்டது. 79 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-12-04 16:09 GMT
புதுச்சேரி
புதுச்சேரியில்  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு தொற்று  உறுதிசெய்யப்பட்டது. இன்று 32 பேர் குணமடைந்தனர்.மேலும் மாகியை சேர்ந்த 79 வயது மூதாட்டி கொரோனாவுக்கு  பலியானார்.  இதனால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,875 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் தொற்று பரவல் 1.11 சதவீதமாகவும், குணமடைவது 98.32 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 87 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 711 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 12 லட்சத்து 55 ஆயிரத்து 172 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
===

மேலும் செய்திகள்