ஐயப்பன் மீது ஆணை: கோவில் நகைகளை உருக்குவதில் குண்டுமணி அளவில் கூட முறைகேடு நடைபெறாது - அமைச்சர் சேகர்பாபு உறுதி

ஐயப்பன் மீது ஆணையாக ஜமீன்தார் காலத்தில் கொடுத்த நகைகளை அப்படியே இருக்கும், பழைய நகைகள் உருக்கும் போது ஒரு குண்டுமணி அளவில் கூட முறைகேடு நடைபெறாது என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-10-03 16:26 GMT
சென்னை,

வருகிற அக்டோபர் 5 தேதி மறைந்த ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தை முதன் முறையாக இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருப்பவர்களின் பட்டியலில் தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

வாழ்ந்து மறைந்த மனித கடவுளாக போற்றப்படுகின்ற இராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளில் அவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வருமாறு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நான் இங்கு வந்துள்ளேன், இதுவரை எந்த அறநிலைய துறை துறை அமைச்சரும் இவர் வீட்டை ஆய்வு செய்ததில்லை.

மேலும் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தை புரணமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, எந்த உதவியாக இருந்தாலும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

மேலும் திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி

வடலூரில் 72 ஏக்கர் நிலபரவில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க , வரைபடம் தயார்செய்ய விளம்பரம் செய்துள்ளது அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளாக உபயக 29 சட்டத்தின்படி நகைகளை உபயோகப்படுத்த திட்டதிற்கு 3 மண்டலமாக சென்னை, மதுரை, திருச்சி என பிரித்து மாலா, ராஜிவ், ரவிச்சந்திரபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே பயன் பாட்டில் இருந்த நகைகள் இல்லாமல், தற்பொழுது பயன் பாட்டியில் இருக்கக்கூடிய நகைகள் உருக்குவதற்கான வேலைகள் தொடரும். திருவேற்காட்டில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிலிருந்து ஒரு குண்டு மணி அளவில் கூட முறைகேடு நடக்காது. வெளிப்படை தன்மையோடு துவங்குவோம் இது ஐயப்பன் மேல் சத்தியமாக எந்த தவறும் நடக்காது.

மேலும் ஏற்கனவே சோணாமநாத் திருக்கோவிலில் திருச்சி, சமயபுரம் கோவிலில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர்,

நகைகள் உருகும் திட்டத்திற்கு பாஜக கண்மூடி தனமாக எதிர்கிறது, பயன்படாமல் வைத்திருப்பதால் யாருக்கு என்ன லாபம், அவர்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் செயல்படுத்தபடும், மதம் இனம் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார் அதை நானும் செய்யமாட்டேன்.

எம்மதவும் சம்மதம்,இந்துக்களுக்கு எதிரான இயக்கம் திமுக என்று அரசியலில் இடம் இல்லாமல் போய்விடும் என்ற எண்ணம் (பாஜகவிடம்) அவர்களிடம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இறுதியாக வழிபாட்டுத்தலங்கள் எப்போது தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்விக்கு பதிலதித்த அமைச்சர்

கொரானா தொற்று யாருக்கும் பரவவில்லை என்ற நிலையில், அனைத்து கோவில்களும் திறக்கப்படும், தெய்வங்களுக்கு பூஜை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்