கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.;
சென்னை,
2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார்.
கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். 3 மணி நேரத்திற்குப் பின்னர் சரியாக பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்தார். இதன்பின்னர் அவையை ஒத்திவைப்பதாக தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்னர் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.