ஆவின் பால் விலை ரூ.6 உயர்த்தி ரூ.3 குறைக்கப்பட்டதா? பால் முகவர்கள் சங்கம் மறுப்பு

ஆவின் பால் விலை ரூ.6 உயர்த்தி ரூ.3 குறைக்கப்பட்டதா? பால் முகவர்கள் சங்கம் மறுப்பு.

Update: 2021-05-09 03:03 GMT
சென்னை, 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத்தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை லிட்டருக்கு ரூ.4, எருமைபால் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி வழங்கியதோடு, நுகர்வோருக்கான விற்பனை விலையை குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் முந்தைய அரசின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வை சுட்டிக்காட்டி அப்போது உயர்த்திய விற்பனை விலையான லிட்டருக்கு ரூ.6-ல் இருந்து தற்போது ரூ.3 விற்பனை விலையை குறைப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையும் உயர்த்தி இருப்பதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது தவறானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்