பெருங்களத்தூரில் போலீசாரை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பாமகவினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பெருங்களத்தூர்,
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடக்கவுள்ள தொடர் போராட்டம், சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி வந்த பாமகவினரை போலீசார் பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்தினர்.
முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாமகவினர் ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.