கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்
கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலூர்,
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவழி போக்குவரத்து பணிக்கான மேல் தளம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் இந்த திட்ட பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.