பாரதி வாழ்ந்த மண்ணில் பரீட்சைக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்வது வேதனை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
அச்சம் இல்லை, அச்சம் இல்லை என்று கூறிய பாரதி வாழ்ந்த தமிழகத்தில் பரீட்சைக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்வது மனதிற்கு வேதனையாக உள்ளது என்று தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு இளம் சிந்தனையாளர் மன்றம் சார்பில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி மகாகவி பாரதி ஆய்வு மையம் தொடக்க விழா காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது.
விழாவுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-
இன்று நான் இந்தப்பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்கு பாரதி மிகப்பெரிய காரணம். சிறு வயதில் இருந்தே பாரதியை பற்றி படித்து, படித்து, கேட்டு, கேட்டதால் அனைத்தும் மனதில் பதிந்து பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதுவே நாம் பாரதிக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
தேசத்தை பற்றி கொஞ்சமாவது இளைஞர்கள் கவலை கொள்ள வேண்டும். அச்சம் இல்லை, அச்சம் இல்லை என்று கூறிய பாரதி வாழ்ந்த தமிழ்நாட்டில் பரீட்சையை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்வது மிகுந்த மனவேதனையாக உள்ளது. பாரதியின் வாழ்க்கையை படித்து கொண்டால் யாரும் தங்களுடைய வாழ்க்கையை முடித்து கொள்ள மாட்டார்கள். தோல்வியை கண்டு கலங்க வேண்டாம் என்பதை ஒவ்வொரு மாணவரின் மனதிலும் பதிய வைக்க வேண்டியது நமது கடமையாகும்.
தாய்மொழி நம் உயிர். அதேநேரத்தில் வேறு ஒரு மொழி படிப்பதால் நமக்கு நம்பிக்கை பிறப்பதுடன், அறிவும் விரிவடைய செய்கிறது. 14 மொழி கற்ற பாரதி எந்த விதத்திலும் குறையவில்லை. இளம் வயதில் வேறு ஒரு மொழி கற்பதன் மூலம் நம்முடைய எண்ண ஓட்டம் அதிகரிப்பதுடன், புதிய வாய்ப்புகளும் கிடைக்கிறது. இளைஞர்கள் அச்சம் தவிர்த்து வையத்து தலைமை கொள்வதன் மூலம் பாரதிக்கு அஞ்சலி செலுத்துவதாக இருக்கும். பள்ளி, கல்லூரிகள், நூல் நிலையங்களில் பாரதி பற்றிய கருத்து ஒலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பாரதியார் வழித்தோன்றல் ரத்தினசாமி சுந்தர், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக தமிழ்நாடு இளம் சிந்தனையாளர் மன்ற உறுப்பினர் வக்கீல் ராமசுவாமி மெய்யப்பன் வரவேற்றார். நம்ம ஊரு பவுண்டேஷன் நிறுவனர் பி.நடராஜன் நன்றி கூறினார்.