நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது: கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2020-09-13 08:43 GMT
சென்னை, 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. ஆனால் பலன் இல்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி உள்ளது. கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்