போதைப்பொருள் கடத்தல்: கொலம்பியா நாட்டுக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, கொலம்பியா நாட்டுக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-09-09 22:27 GMT
சென்னை, 

கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் எட்வின் என்ரிக்யூ (வயது 32). துபாயில் இருந்து சென்னைக்கு மார்க்கர் பேனாவில் போதை பொருள் கடத்தி வந்த இவரை, கடந்த 2015-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.தேன்மொழி, குற்றம்சாட்டப்பட்ட எட்வினுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்