பள்ளிகள், கல்லூரிகள் 14-ந்தேதி திறப்பா? அரசு விளக்கம்
வருகிற 14-ந்தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது.
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கில் சற்று தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 30-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.
அதனை பின்பற்றி தமிழக அரசும், செப்டம்பர் 30-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவித்துவிட்டது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூட, பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும் நிலை தற்போது இல்லை என்றே தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக செய்திக்குறிப்பு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வெளியிடப்பட்டு இருப்பது போலவும், அதில் வருகிற 14-ந்தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது போலவும் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக தகவல் பரவியது.
இதைப் பார்த்து பலர் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதா? என்றும் பரபரப்பாக பேசினர். ஆனால் அந்த செய்திக்குறிப்பு போலியானது என்றும், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்றும் பின்னர் அறிவிக்கப்பட்டது.