தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்று பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2020-09-05 09:02 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்று பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி. ஆக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பி.ராஜன் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.  தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆக பிரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னையில் உரிமை பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.  தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்