புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-03 05:29 GMT
சென்னை,

புதுச்சேரி மாநில மக்கள் நிதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் (70) கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில்,

களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு என்றும் நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்