பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது.;

Update:2020-08-11 09:27 IST
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கி வரும் நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.82 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 3,553 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து நொடிக்கு 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 29.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்