கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-20 02:39 GMT
கன்னியாகுமரி ,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பும், பரவலும் புதிய உச்சத்தை தொட்டு  இருந்து வருகிறது. 

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,319 ஆக இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,449 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக குமரி மாவட்டத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்