தமிழகத்தில் ஒரே நாளில் 4,163 பேர் குணம் அடைந்தனர்

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 4,163 பேர் குணம் அடைந்தனர். 19 மாத குழந்தை உள்பட 64 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-07-10 22:43 GMT
சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 19 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் உள்பட 3 ஆயிரத்து 680 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 163 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 82 ஆயிரத்து 324 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் 47 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் என 64 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் காஞ்சீபுரத்தை சேர்ந்த 19 மாத குழந்தையும் அடங்கும். 16 மாவட்டங்களில் நேற்று கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இறப்பு பட்டியலில் சென்னையில் 27 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், மதுரையில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 4 பேரும், தேனி, கோவையில் 3 பேரும், காஞ்சீபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருப்பூரில் தலா 2 பேரும், விருதுநகர், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோட்டில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,829 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த பட்டியலில் சென்னயில் 1,205 பேரும், செங்கல்பட்டில் 242 பேரும், திருவள்ளூரில் 219 பேரும், தூத்துக்குடியில் 195 பேரும், மதுரையில் 192 பேரும், நெல்லையில் 145 பேரும், விருதுநகரில் 143 பேரும், வேலூரில் 140 பேரும், சேலத்தில் 127 பேரும், திருச்சியில் 109 பேரும், தேனியில் 108 பேரும், கன்னியாகுமரியில் 105 பேரும், திருவண்ணாமலையில் 103 பேரும், ராமநாதபுரத்தில் 85 பேரும், கள்ளக்குறிச்சியில் 82 பேரும், காஞ்சீபுரத்தில் 61 பேரும், தஞ்சாவூரில் 47 பேரும், கோவையில் 43 பேரும், சிவகங்கையில் 42 பேரும், விழுப்புரத்தில் 41 பேரும், புதுக்கோட்டையில் 36 பேரும், திருப்பத்தூரில் 31 பேரும், திருவாரூரில் 27 பேரும், திருப்பூரில் 24 பேரும், தர்மபுரி, ஈரோட்டில் தலா 15 பேரும், கடலூர், ராணிப்பேட்டையில் தலா 13 பேரும், நீலகிரியில் 10 பேரும், தென்காசியில் 9 பேரும், நாகப்பட்டினத்தில் 7 பேரும், திண்டுக்கலில் 8 பேரும், கரூர், அரியலூரில் தலா 5 பேரும், கிருஷ்ணகிரி, நாமக்கலில் தலா 2 பேரும், பெரம்பலூரில் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்