நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1400 ஐ கடந்துள்ளது.;

Update: 2020-07-09 04:53 GMT
சென்னை,

நெல்லை மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று வரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது. 

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 139 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1438 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது வரை 702 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 589 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் நெல்லையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியே காணப்படுகிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்