மதுரை மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,403

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,403 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-07-03 05:47 GMT
மதுரை

மதுரையில் வேகமாக பரவும் கொரோனாவால் நேற்று  ஒரே நாளில் 273 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 41 பேர் பாதிக்கப்பட்டனர். மதுரையை சேர்ந்த 4 கர்ப்பிணிகளுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 5 பேருக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 65 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 273 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,403 ஆக உயர்ந்து உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 43 பேர் உயிரிழந்து உள்ளனர். 887 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் செய்திகள்