மதுரையில் மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-01 08:42 GMT
மதுரை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 2.557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 206 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,763 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மதுரையில் 32 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,708 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்