அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை - ஓ.பன்னீர்செல்வம் அன்னையர் தினம் வாழ்த்து
அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அன்னையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் தாயிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை. என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்களாம் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்!
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை. என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்களாம் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்! #HappyMothersDay
— O Panneerselvam (@OfficeOfOPS) May 10, 2020
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறேன். #HappyMothersDay
— O Panneerselvam (@OfficeOfOPS) May 10, 2020