ரஜினி, கமல், திமுக என கூட்டணியாக வந்தாலும் அதிமுக ஒற்றையாக எதிர்கொள்ளும் - ஜெயக்குமார்
ரஜினி, கமல், திமுக என கூட்டணியாக வந்தாலும் அதிமுக ஒற்றையாக எதிர்கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஔவையார் சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின் மற்றும் பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
நடிகர் ரஜினிகாந்த் எந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைந்தார் என்பது தமக்கு தெரியாது என்றும், ரஜினி, கமல், திமுக என எத்தனை கட்சிகள் வந்தாலும், அதிமுக ஒற்றையாக எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.