ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.