திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள்; வைகோ அறிக்கை

திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-11-04 05:16 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க.வின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த நவம்பர் 1ந்தேதி வெளியிட்ட பதிவில், திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்து டுவீட் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவில்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று பா.ஜ.க. டுவீட் செய்து இருந்தது.

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்
மேலும், அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.க.வும், தி.மு.க.வை நம்பி வாழும் கம்யூனிஸ்டுகளும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்ட துணைக்கு அழைப்பது தமிழ் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்த பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!


எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.

சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!#BJPInsultsThiruvalluvar

— M.K.Stalin (@mkstalin) November 3, 2019

என்று பதிலளித்து உள்ளார்.

இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, போக்குவரத்து காவல்துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி, ஆங்கில மொழி மட்டும் இடம்பெற்றிருப்பதற்கும் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்