தூய்மை தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பெறாத சென்னை ரெயில் நிலையங்கள்

தூய்மை தரவரிசை பட்டியலில் சென்னையின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களான எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எக்மோர் மற்றும் தாம்பரம் ஆகிய மூன்றும் முதல் 50 இடங்களில் கூட இடம் பெறவில்லை.

Update: 2019-10-04 06:12 GMT
சென்னை,

தூய்மை ரெயில் நிலையம்  ‘ஸ்வஜ் ரெயில், ஸ்வச் பாரத் 2019’ அறிக்கை இந்தியா முழுவதும் 720 ரெயில் நிலையங்களை ஆய்வு செய்தது. இந்த பிரிவில் ஜெய்ப்பூர் ஒட்டுமொத்த  தூய்மை ரெயில் நிலையமாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.  சஸ்வந்த்பூர், புனே, செகந்திராபாத், தாதர் மற்றும் சூரத் போன்ற நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னையின் மூன்று நிலையங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. இவை அனைத்தும் ஒரே பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தூய்மை தரவரிசை பட்டியலில் சென்னையின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களான எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எக்மோர் மற்றும் தாம்பரம் ஆகிய மூன்றும் முதல் 50 இடங்களில் கூட இடம் பெறவில்லை.

 எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையம் 58-வது இடத்திலும் (2018 இல் 36), எக்மோர் 149 (27), தாம்பரம் 321வது (62) இடத்திலும் உள்ளன. ஒட்டுமொத்த தூய்மை மதிப்பீட்டில் தெற்கு ரெயில்வே மண்டலம் கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்தது. அது தற்போது  12 ஆக குறைந்துள்ளது.

சென்னை ரெயில் நிலையங்களை  சுத்தமாக வைத்திருக்க துப்புரவு ஒப்பந்தங்களுக்கு கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சென்ட்ரலில் ஒரு மாதத்திற்கு 80 லட்சமும், எக்மோரில் ஒரு மாதத்திற்கு ரூ.35 முதல் 40 லட்சமும் தூய்மை பணிக்காக  செலவிட்டதாகக் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் கூறுகின்றன. சுத்தம் செய்வது இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்