தனியார் ரெயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும் - தயாநிதிமாறன் எம்.பி.
தனியார் ரெயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும் என்று தயாநிதிமாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
தெற்கு ரெயில்வே பொதுமேலாளரை சந்தித்த பின் திமுக எம்.பி. தயாநிதிமாறன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-
ரெயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து மனு அளித்தோம். கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டோம்.
மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தனியார் ரெயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும், இது தொடர்பாக ரெயில்வே மந்திரியை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.