போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு; அமைச்சர் சி.வி. சண்முகம்

போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

Update: 2019-07-30 15:34 GMT
சென்னை,

சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரிப்பு மற்றும் இதுதொடர்பான  வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்குவதை கவனத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்கிறது.  இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நீதிமன்றங்களை மத்திய அரசு 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ்வகையான நீதிமன்றங்கள் மத்திய அரசால்  அமைக்கப்பட வேண்டும். கட்டமைப்பு உள்பட பல்வேறு செலவினங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனிடையே அமைச்சர் சி.வி. சண்முகம், போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வந்துள்ளது.  போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

இதேபோன்று பிப்ரவரி 9ந்தேதியை கொத்தடிமைகளின் விடுதலை தினமாக அறிவிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்